சிறப்புக் காவல் இளைஞர் படையில் 10,500 பேருக்கு வேலை - தமிழக அரசு அறிவிப்பு

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  7:14 PM No comments

இந்தப் பணியில் சேருவதற்கு தகுதி என்ன இருக்க வேண்டும்?


இந்தப் பணியில் சேருவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 18 வயது முதல் 25 வயது வரை (1-1-1988 முதல் 1-1-1995) இருக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 வயது முதல் 27 வயது வரை (1-1-1986 முதல் 1-1-1995) இருக்கலாம். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியர், பழங்குடியினருக்கு 18 வயது முதல் 30 வயது வரை (1-1-1983 முதல் 1-1-1995) இருக்கலாம்.

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்), மற்றும் பழங்குடியினர் 167 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் மார்பு அளவானது சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ. இருக்க வேண்டும். மூச்சினை முழுமையாக இழுத்த நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீ. மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.

எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

இந்தப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு விடையளிக்க ஒரு மணி நாற்பது நிமிடங்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ், ஆங்கிலம், கணிதம், பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்து சைகைகள் மற்றும் முதலுதவி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் அந்தந்த மாநகர அல்லது மாவட்ட காலிப் பணி இட எண்ணிக்கைக்கு ஏற்ப 1:5 என்ற விகித அடிப்படையில், இன வாரியாக அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அந்தத் தேர்வில் 1,500 மீட்டர் தூர ஓட்டத்தை ஏழு நிமிடம் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும். உயரம் தாண்டுதலில் 1.20 மீட்டர் அல்லது நீளம் தாண்டுதலில் 3.80 மீட்டர் தூரத்தைத் தாண்ட வேண்டும். 100 மீட்டர் ஓட்டத்தை 15 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும் அல்லது 400 மீட்டர் ஓட்டத்தில் 80 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும். கயிறு ஏறுதலில் 5 மீட்டர் ஏற வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தகுதி பெற வேண்டும். ஏதேனும் ஒரு நிகழ்வில் தகுதி இழந்தால் மீதமுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது. இந்த நான்கு நிகழ்வுகளும் தகுதிச் சுற்றுத் தேர்வுகள் என்பதால் இதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது. இந்த நிகழ்வுகளில் உயரம் தாண்டுதலுக்கும் நீளம் தாண்டுதலுக்கும் மட்டும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும். இந்த இரண்டு வாய்ப்புகளில் விண்ணப்பதாரர் பெறும் உயர் அளவு கணக்கில் கொள்ளப்படும். 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கயிறு ஏறுதல் நிகழ்வுகளுக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும். கயிறு ஏறும் போது கைகளைத் தவிர கால்களையோ அல்லது உடலின் மற்ற பாகங்களையோ பயன்படுத்தக் கூடாது.

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பத்துடன் அனுப்பிய  சான்றொப்பமிடப்பட்ட, சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் தேர்வு மையத்திற்கு சரிபார்ப்பதற்காகக் கொண்டு வர வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வுக் கட்டணம் ரூ.100. இந்தத் தேர்வுக் கட்டணத்தை குறிப்பிட்ட அலுவலக முகவரியில் செலுத்தி விண்ணப்பம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய கையேட்டை 02.09.2013 காலை 10 மணி முதல் 30-9-2013 மாலை 5.45 மணிக்குள் அனைத்து வேலை நாட்களிலும் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு நேரடியாக விண்ணப்பத்தைப் பெற இயலாதவர்கள் இணையதளத்திலிருந்து விண்ணப்பம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய கையேட்டினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள், அவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாவட்டம் அல்லது மாநகரத்துக்குரிய முகவரியில் குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின்  பதவியின் பெயரில் தேர்வுக் கட்டணத்துக்கான வங்கி வரைவோலையை எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

உரிய வயதுத் தகுதி, கல்வித் தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சரியாகப் பூர்த்தி செய்யப்படாத, புகைப்படம் ஒட்டப்படாத, கையொப்பமிடாத, சரியான முகவரியிடப்படாத குறைந்த தேர்வுக் கட்டணம் செலுத்தியுள்ள, தேர்வுக் கட்டணத்துக்கான வரைவோலையை இணைக்காத இணையதள விண்ணப்பங்கள், தவறான முகவரிக்கு எடுக்கப்பட்ட வங்கி வரைவோலை உள்ள விண்ணப்பங்கள், தவறான முகவரிக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் போன்றவை ஆரம்பநிலையிலேயே எந்தவித அறிவிப்புமில்லாமல் நிராகரிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்னதாக இந்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட அலுவலக முகவரியில் 1-10-2013 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை விண்ணப்பதாரர்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வயதுத் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம், அவர்களது முகவரிக்கு அனுப்பப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு முன்னர் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், அவர்களின் விண்ணப்ப நகலைக் காட்டி, அவர்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ள மாவட்டம் அல்லது மாநகரக் காவல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் உடல் தகுதித் தேர்வுகளில் அடையும் தேர்ச்சியின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி, வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட, மாநகர மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் குணநலன்கள், முந்தைய நடத்தைகள் சார்ந்த விசாரணைகள் நடத்தப்பட்டு, தகுதி உடையவர்கள்  பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

தமிழக அரசு புதிதாக உருவாக்கியுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் சேர, ஆர்வமுள்ள எஸ்எஸ்எல்சி படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்கு: www.tnusrb.tn.gov.in

விண்ணப்பங்களை எங்கு வாங்கலாம்?

01.     சென்னை காவல் - காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) சென்னை பெருநகர காவல் அலுவலகம், எழும்பூர், சென்னை - 600 008
02.     காஞ்சிபுரம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், காஞ்சிபுரம் - 631 501
03.     திருவள்ளூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், திருத்தணி சாலை, திருவள்ளூர் - 602 001
04.     விழுப்புரம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் - 605 602
05.     கடலூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கடலூர் - 607 001
06.     வேலூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர் - 632 009
07.     திருவண்ணாமலை - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருவண்ணாமலை - 606 604
08.     கோயம்புத்தூர் - காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), மாநகர காவல் அலுவலகம், கோயம்புத்தூர் -  641 018
09.     கோயம்புத்தூர்  மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கோயம்புத்தூர் - 641 018
10.     ஈரோடு - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், காந்தி சாலை, ஈரோடு - 638 001
11.     நீலகிரி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நீலகிரி மாவட்டம், நீலகிரி - 643 001
12.     திருப்பூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், அங்கேரிய பாளையம் சாலை, திருப்பூர் - 641 602
13.     சேலம் மாநகரம் - காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாநகர காவல் அலுவலகம், லைன் மேடு, சேலம் மாநகரம் - 636 006
14.     சேலம் மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நெத்திமேடு, சேலம் - 636 002
15.     நாமக்கல் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தும்மங்குறிச்சி, நாமக்கல் - 637 003
16.     தருமபுரி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தருமபுரி - 636 705
17.     கிருஷ்ணகிரி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கிருஷ்ணகிரி - 635 115
18.     திருச்சி மாநகரம் - காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து), மாநகர காவல் அலுவலகம், சுப்பிரமணியபுரம், திருச்சி - 620 020
19.     திருச்சி மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், சுப்பிரமணியபுரம், திருச்சி - 620 020
20.     கரூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், கரூர் - 639 007
21.     பெரம்பலூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பெரம்பலூர் - 621 212
22.     அரியலூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பல்@நாக்கு வளாகம், அரியலூர் - 621 704
23.     புதுக்கோட்டை - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருமயம் சாலை, புதுக்கோட்டை - 622 001
24.     தஞ்சாவூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர் - 631 001
25.     நாகப்பட்டினம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், வெள்ளிப்பாளையம், நாகப்பட்டினம் - 611 001
26.     திருவாரூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பெருந்திட்ட வளாகம், திருவாரூர் - 610 001
27.     மதுரை மாநகரம் - காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), மாநகர காவல் அலுவலகம், தெற்கு காவல் கூட தெரு, மதுரை - 625 001.
28.     மதுரை மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், அழகர் கோவில் சாலை, சர்வேயர் காலனி, கே.புதூர், மதுரை - 625 007
29.     விருதுநகர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், விருதுநகர் - 626 002
30.     திண்டுக்கல் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திண்டுக்கல் - 624 004
31.     தேனி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தேனி - 625 531
32.     இராமநாதபுரம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், இராமநாதபுரம் - 625 503
33.     சிவகங்கை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், சிவகங்கை - 630 561
34.     திருநெல்வேலி மாநகரம் - காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாநகர காவல் அலுவலகம், திருநெல்வேலி - 627 002
35.     திருநெல்வேலி மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருநெல்வேலி - 627 002
36.     தூத்துக்குடி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628 101
37.     கன்னியாகுமரி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - 629 001

விண்ணபங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 1.10.2013 மாலை 5.45 மணி வரை
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 10.11.2013

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

என்னுடன்...

பின் தொடர்பவர்கள்...

தொடர்பு கொள்ள...

Name

Email *

Message *

back to top