குடிமகனை குறிவைக்கும் போக்குவரத்து காவலர்கள் - உண்மை சம்பவம்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  8:59 PM No comments

         நேற்று இரவு  (வெள்ளிக்கிழமை ) நான் என் நண்பர்களுடன் இரவு 10 மணியளவில் வேளச்சேரி 100 அடி ரோட்டில் நின்று கொடிருந்தோம். அப்பொழுது சிக்னல் அருகே இரண்டு போக்குவரத்து காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். சிக்னல் போட்டதும் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பார்த்த காவலர்கள் ஓடி வந்து அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்க்காமல் அவர்களின் வண்டியில் இருந்த சாவியை எடுத்து கொண்டு " நீ குடித்து விட்டு வண்டி ஒட்டுகிறீர்கள் " என்று கேட்டார்கள்.


அந்த நண்பர்கள் " நாங்கள் மதுபானம் குடிக்க வில்லை என்று சொல்ல " அந்த காவலர்கள் பதிலுக்கு "நீங்கள் பாரிலிருந்து வருவதை நாங்கள் பார்த்து கொண்டிருந்தோமே.." என்று சொன்னார்கள். 



எனக்கு அப்பொழுதான் ஒரு தகவல் தெரிய வந்தது என்னவென்றால் இந்த காவலர்கள் போக்குவரத்து நெரிசலை கவனம் கொள்ளாமல் பாரிலிருந்து வரும் வாகனங்களை குறி வைத்து வரி (1000, 2000 ரூபாய் ) வசூல் செய்கிறார்கள் என்று. அந்த நேரத்தில் இந்த நிகழ்வை எனது மொபைலில் வீடியோ பதிவு செய்யலாம் என்று பார்த்தல் இருளில் சரியாக ஒளிபதிவு ஆகவில்லை.



 அதே நேரத்தில் என் நண்பர்களோ " வேண்டாம் நமக்கு எதுக்கு இந்த பிரச்சினை " என்று சொல்லி என்னை அழைத்து கொண்டு சென்றார்கள். பிறகு நாங்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டோம். 

தயவு செய்து சொல்கிறேன் இதுபோல உங்களுடைய பணத்தை ஆட்டய போடா நினைக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு கொடுக்காமல், உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமியுங்கள். 

குடிக்கும் குடிமகன்கள் கவனிக்க வேண்டியவை :

1. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிருங்கள். அப்படி  தவிர்க்க முடியாத    சூழ்நிலையில் நண்பர்களை (மதுபானம் அருந்தாத) அழைத்து அவருடன் செல்வது நல்லது.

2. குடித்து விட்டு வாகங்களை வேகமாக ஓட்டுவதை முற்றிலுமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். 

3. அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அளவாக குடியுங்கள்.

4. நீங்கள் குடிக்கும் மதுவினால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது. உங்களின் உடல் நலத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

என்னுடன்...

பின் தொடர்பவர்கள்...

தொடர்பு கொள்ள...

Name

Email *

Message *

back to top