இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-புகார் பதிவு செய்ய

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  7:19 PM 1 comment

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்  (the consumer protect act, 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.



இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004 முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.

நுகர்வோரின் உரிமைகள்:

1. உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதில் இருந்து பாதுகப்பு பெறும் உரிமை

2. நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக, சந்தையில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரனிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

3. பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை

4. நுகர்வோரின் குறைகளைக் கேட்பத்ற்கும் அவர்க்ளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை

5. நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை

6. நுகர்வோருக்கான விழிப்புணர்வினைப் பெறும் உரிமை

7. நுகர்வோரின் சச்சரவுகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் எல்லை:

1. இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2. பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும்.

3. தனியார் துறை, பொதுத்துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

சட்டம் பொருந்தாத நிலைகள்

1. வாங்கிய பொருளை மறு விற்பனை செய்தல் அல்லது இலாபம் ஈட்ட வேண்டும் என்கிற நோக்கத்துக்கு வாங்கப்பட்ட பொருள்.

2. இலவசமாக பெற்ற பொருள் அல்லது இலவச சேவை
உதாரணம்:
அரசு மருத்துவமனைகளில் பெறும் இலவச மருத்துவ சேவை.

3. இலவச அனுமதியளிக்கும் திட்டங்களில் பெறும் சேவை குறைபாடுகளுக்கு இச்சட்டத்தின்படி வழக்கு தொடர முடியாது.

 இந்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், உரிமை சம்பந்தமான புகாரை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.


About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

1 comment:

என்னுடன்...

பின் தொடர்பவர்கள்...

தொடர்பு கொள்ள...

Name

Email *

Message *

back to top